செயின் பறிப்பு வழக்கில் கைதான திமுக ஊராட்சி மன்ற தலைவி, 15 ஆண்டுகளாகச் செயின் திருட்டில் ஈடுபட்டதாக அதிர்ச்சி வாக்குமூலம் அளித்துள்ளார்.
சென்னை நெற்குன்றத்தைச் சேர்ந்த வரலட்சுமி என்பவர் காஞ்சிபுரத்தில் இருந்து அரசு பேருந்தில் திரும்பியபோது, அவரின் 5 சவரன் செயினை மர்ம பெண் ஒருவர் திருடியுள்ளார்.
இது சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு, திருப்பத்தூர் மாவட்டம், நரியம்பட்டுத் திமுக ஊராட்சி மன்ற தலைவியான பாரதி என்பவரைக் கைது செய்து விசாரணை மேற்கொண்டனர்.
அதில், கடந்த 15 ஆண்டுகளாகச் செயின் திருட்டில் ஈடுபட்டு வருவதாகவும், திருடிய நகையை விற்று கிடைக்கும் பணத்தில் சொந்த ஊரில் வணிக வளாகம் கட்டி வருவதாகவும் வாக்குமூலம் அளித்துள்ளார்.
திமுக ஊராட்சி மன்ற தலைவியாக ஆன பின்னரும் திருட்டு பழக்கத்தை விட சொல்லி உறவினர்கள் அறிவுறுத்தியும், தன்னால் திருட்டை விட முடியவில்லை எனத் தெரிவித்துள்ளார். பணம், புகழ், வசதிகள் இருந்தும், திருட்டு செயலில் ஈடுபடும்போது மட்டுமே மிகழ்ச்சி அளிப்பதாகவும் கூறியுள்ளார்.
தினமும் திருட்டில் ஈடுபடக் கூடாது எனச் சத்தியம் எடுத்துக் கொள்வதாகவும், ஆனால் வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் தன்னால் திருடாமல் இருக்க முடியவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.
மேலும், தனது திருட்டு பழக்கத்தைக் கண்டு மிகவும் வேதனை அடைவதாகக் கூறிய திமுக ஊராட்சி மன்ற தலைவர்ப் பாரதி, தன்னை மன்னித்து விடுங்கள் எனப் போலீசாரிடம் கெஞ்சியப்படி வாக்குமூலம் அளித்துள்ளார்.