கனமழை வெள்ளத்தால் பஞ்சாபில் மொத்தமுள்ள 23 மாவட்டங்களும் பாதிக்கப்பட்டவையாக மாநில அரசு அறிவித்துள்ளது.
1.48 லட்சம் ஹெக்டேருக்கும் மேற்பட்ட விளைநிலங்கள் நீரில் மூழ்கியுள்ளன. 1,400-க்கும் மேற்பட்ட கிராமங்களை வெள்ளம் சூழ்ந்துள்ளது. இதில் குர்தாஸ்பூர் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளது.
ஃபாசில்காவின் நூர் ஷா பகுதியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்குத் தன்னார்வலர்கள் மூலம் நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டன.
இந்நிலையில் வெள்ளம் பாதித்த பகுதிகளைப் பார்வையிட்டு, பாதிக்கப்பட்ட மக்களைச் சந்தித்து ஆறுதல் கூற பிரதமர் மோடி வரும் 9 ஆம் தேதி பஞ்சாப் மாநிலம் குர்தாஸ்பூருக்கு வருகைத் தரவுள்ளதாக அம்மாநில பாஜகத் தெரிவித்துள்ளது.