ஜிஎஸ்டி வரிக்குறைப்புக்குத் தமிழக அரசும், திமுக கூட்டணி கட்சிகளும் வாய் திறந்து நன்றிக் கூட தெரிவிக்கவில்லை என்று பாஜக மூத்த தலைவர் தமிழிசை செளந்தரராஜன் விமர்சித்துள்ளார்.
சென்னை விமான நிலையத்தில் பேசியவர்,
எல்லாத் தலைவருக்கும் பாஜக மரியாதை அளித்து பரந்த மனப்பான்மையுடன் நடந்து வருகிறது என்று தமிழிசை செளந்தரராஜன் கூறினார்.
ஜிஎஸ்டி தொடர்பாக எல்லா மாநிலத்திலும் இருந்து நன்றிக் கடிதம் நிர்மலா சீதாராமன் அனுப்புகிறார்கள் என்றும் ஜிஎஸ்டி வரிக்குறைப்புக்குத் தமிழக அரசும்,
திமுக கூட்டணி கட்சிகளும் வாய் திறந்து நன்றித் தெரிவிக்கவில்லை என்று தமிழிசை செளந்தரராஜன் குறிப்பிட்டார்.
தமிழ் தமிழர் என்பவர்கள் சி.பி.ராதாகிருஷ்ணனுககு ஆதரவு தெரிவிக்கத் தயக்கம் காட்டுகின்றனர் என்றும் கடந்த நாடாளுமன்ற தேர்தல் 40 இடங்களில் வெற்றிப் பெற்றார்கள் ஓட்டு திருடி வெற்றிப் பெற்றார்களா?” என்று தமிழிசை செளந்தரராஜன் கேள்வி எழுப்பினார்.
அம்பேத்கர் இல்லம் ஏலத்திற்கு வந்தபோது அதனை பாஜக வாங்கி ஆவண காப்பகமாக வைத்திருக்கிறது என்று தமிழிசை செளந்தரராஜன் கூறினார்.