திண்டுக்கலில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் பிரச்சார வாகனத்தை தவெக-வினர் முற்றுகையிட்டதால் பதற்றம் நிலவியது.
மெங்கில்ஸ் சாலையில் உள்ள தனியார் தங்கும் விடுதியில் இருந்து பிரச்சாரத்திற்காக எடப்பாடி பழனிசாமி மற்றும் அதிமுக மூத்த நிர்வாகிகள் புறப்பட்டனர்.
அப்போது, வாகனத்தின் அருகே வந்த தவெக தொண்டர்கள் தமிழக வெற்றிக் கழகம் வாழ்க எனக் கோஷம் எழுப்பினர்.
பின்னர், பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த சிஆர்பிஃப் வீரர்கள் தவெகவினரை அங்கிருந்து அப்புறப்படுத்தினர். இதனால், அந்தப் பகுதியில் சிறிது நேரம் பதற்றம் நிலவியது.