விருதுநகர் அருகே சாலையில் சென்று கொண்டிருந்த அரசு பேருந்தின் படிக்கட்டு உடைந்து விழுந்ததால் பயணிகள் அவதிக்குள்ளாகினர்.
விருதுநகர் மாவட்டம், குரண்டியில் இருந்து மதுரை பெரியார் பேருந்து நிலையத்திற்கு 60க்கும் மேற்பட்ட பயணிகளுடன் அரசு பேருந்து புறப்பட்து.
ஆவியூர் அருகே சென்றபோது அரசு பேருந்தின் பின்பக்கப் படிக்கட்டு உடைந்து விழுந்தது. உடனடியாக, பேருந்தில் இருந்த பயணிகள் இறக்கிவிடப்பட்டு மாற்று பேருந்தில் அனுப்பி வைக்கப்பட்டனர். இதனை தொடர்ந்து, பேருந்தைப் பழுது நீக்குவதற்காக நடத்துநரும், ஒட்டுநரும் திருப்பரங்குன்றம் பணிமனைக்கு எடுத்துச் சென்றனர்.
இதுபோன்ற நிகழ்வுகள் தொடர்ந்து அரங்கேறி வருவதால் பயணிகளின் பாதுகாப்பு கேள்விக்குறியாக உள்ளதாகச் சமூக ஆர்வலர்கள் கேள்வி, மேலும், பேருந்துகளை முறையாகப் பராமரிக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளனர்.