மின்சார வாரியத்தில் காலியாக உள்ள கள உதவியாளர் பணியிடங்கள் டிஎன்பிஎஸ்சி மூலம் நிரப்பப்படும் என்ற அறிவிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்துச் சென்னையில் மின்வாரிய ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தமிழ்நாடு மின்வாரிய கேங்க்மேன் மற்றும் பணியாளர்கள் சங்கம் சார்பில் மாநிலம் முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சென்னை அண்ணாசாலையில் உள்ள மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் 100க்கும் மேற்பட்ட கேங்மேன் ஊழியர்கள் கலந்து கொண்டனர்.
அப்போது செய்தியாளர்களிடம் பேசிய சங்க நிர்வாகிகள், தமிழகம் முழுவதும் 12 மண்டலங்களில் போராட்டம் நடைபெற்று வருவதாகத் தெரிவித்தனர்.
டிஎன்பிஎஸ்சி தேர்வு மூலம் நேரடியாகப் பணியாளர்களை பணியில் அமர்த்துவதை உடனடியாகக் கைவிட வேண்டும் என்றும், நிலுவையில் உள்ள மருத்துவ காப்பீடு உள்ளிட்டவைகளை உடனடியாக வழங்க வேண்டும் எனவும் கூறனர்.
மேலும், மின்வாரிய ஊழியர்களின் கோரிக்கைகளை அரசு உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தினர்.