கிடப்பில் போடப்பட்ட "மரப்பாலம்" பணிகள் : போக்குவரத்து மாற்றத்தால் மக்கள் அவதி!
Sep 29, 2026, 03:23 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

கிடப்பில் போடப்பட்ட “மரப்பாலம்” பணிகள் : போக்குவரத்து மாற்றத்தால் மக்கள் அவதி!

Murugesan M by Murugesan M
Sep 8, 2025, 05:26 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

கோவை மதுக்கரை மரப்பாலம் விரிவாக்கப் பணிகள் கடந்த 5 மாதங்களாகக் கிடப்பில் போடப்பட்டுள்ளதால் அப்பகுதி மக்கள் கடும் இன்னல்களை  சந்தித்து வருகின்றனர். அது குறித்த செய்தி தொகுப்பை  தற்போது பார்க்கலாம்.

கோவை மதுக்கரை மரப்பாலம் சேலம், கொச்சி தேசிய நெடுஞ்சாலை அருகே அமைந்துள்ள முக்கிய பகுதியாகும். இந்தப் பகுதியில் ரயில்வே சுரங்கப்பாதை ஒன்றும் அமைந்துள்ளது.

இந்தப் பாலம் ஆங்கிலேயர்க் காலத்தில் மரத்தினால் கட்டப்பட்டதால் மரப்பாலம் என அழைக்கப்படுகிறது. பிறகு அந்தப் பாலம் கான்கிரீட் பாலமாக மாற்றப்பட்டது.

அந்த வழியில் தினமும் சுமார் 30 ஆயிரத்திற்கும் அதிகமான வாகனங்கள் கடந்து சென்று வந்தன. பாலத்தின் அகலம் குறைவாக இருப்பதால் ஒரு சமயத்தில் ஒரு வாகனம் மட்டுமே செல்ல முடியும். எதிர்  திசையில் வரும் வாகனங்கள் அதுவரை காத்திருந்து தான் கடக்க முடியும்.

இதனால் அப்பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் நிலவியது. ஒவ்வொரு நாளும் வேலை, தொழில், கல்வி நிமித்தமாக ஆயிரக்கணக்கான மக்கள் பயணிக்கும் நிலையில், பாலத்தை அகலப்படுத்த தொடர்க் கோரிக்கைகள் எழுந்து வந்தன.

இதன் காரணமாகக் கடந்த மார்ச் மாதத்தில் பாலத்தை அகலப்படுத்த, மாநில நெடுஞ்சாலைத் துறை சார்பில், 102 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டு டெண்டர் விடப்பட்டது. தொடர்ந்து பாலத்தின் இரு புறமும் குழிகள் தோண்டப்பட்டுப் பணிகள் தொடங்கப்பட்டன.

ஆனால் குடிநீர், மின் வாரியத்திடம் அனுமதி பெறாததால் பணிகள் மேற்கொள்ளப்படாமல் கடந்த 5 மாதங்களாகக் கிடப்பில் போடப்பட்டுள்ளது. இதனால் அந்தப் பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது.

மரப்பாலம் பகுதியை சுற்றி ஐம்பதாயிரத்துக்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. பணிகளுக்காகப் பாலம் மூடப்பட்டதால் தினமும் 5 கிலோ மீட்டர் தூரம் சுற்றிச் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக அப்பகுதி மக்கள் வேதனைத் தெரிவிக்கின்றனர்.

கிடப்பில் போடப்பட்ட இந்தப் பால பணிகளால் தங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாக வேதனைத் தெரிவிக்கின்றனர் அந்தப் பகுதியை சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர்கள். மேலும் வருமானம் இன்றித் தவிப்பதாகவும் அவர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

பணிகள் துவங்கும் முன்பே குடிநீர் வாரியம், மின் வாரியத்துடன் பேசி முறையாக அனுமதி பெற்றிருந்தால் இந்த நிலை ஏற்பட்டிருக்காது என்று தெரிவிக்கும் மக்கள் உரிய தீர்வு காண வேண்டுமெனக் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags: மக்கள் அவதி"Tree bridge" work put on hold: People suffer due to traffic changesமரப்பாலம்" பணிகள்கோவை மதுக்கரை மரப்பாலம் விரிவாக்கப் பணிகள்
Share
Tweet
SendShare
Previous Post

சென்னையில் மின்வாரிய ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்!

Next Post

நேபாளத்தில் சமூக ஊடகங்களுக்கு விதிக்கப்பட்ட தடையை எதிர்த்து இளைஞர்கள் போராட்டம்!

Related News

ஜெம் வீரமணி வழக்கை அரசியலாக்க வேண்டாம் என்ற அறிவுறுத்தலை பின்பற்றவில்லை;தவெக அரசு மீது திமுக குற்றச்சாட்டு

ஜெம் வீரமணி மீதான பாலியல் வன்கொடுமை வழக்கு; பொதுமக்கள் தகவல் அளிக்க அழைப்பு

இத்தாலி பள்ளிகளில் புர்கா மற்றும் நிகாப் தடை : பிரதமர் மெலோனி அதிரடி உத்தரவு – சிறப்பு தொகுப்பு!

‘இந்தியா-ஏஐ மிஷன்’ திட்டம் : ரூ.20,000 கோடி முதலீடு செய்யும் மத்திய அரசு – சிறப்பு தொகுப்பு!

மருத்துவ சுற்றுலாவில் உச்சம் : இந்தியாவிற்கு படையெடுக்கும் நோயாளிகள் – சிறப்பு தொகுப்பு!

குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோயில் தசரா திருவிழா – பந்தல்கால் நடும் நிகழ்ச்சி கோலாகலம்!

Load More

அண்மைச் செய்திகள்

ஹரியானாவில் ஆழ்துளைக் கிணற்றில் இருந்து மீட்கப்பட்ட 3 வயது சிறுமி – மருத்துவமனையில் உயிரிழப்பு!

கோவையில் குட்கா கடத்தல் வழக்கில் தப்பியோட முயன்ற இருவருக்கு கைகளில் எலும்பு முறிவு!

இன்றைய தங்கம் விலை!

உயிரை பணயம் வைத்து கடத்தல்காரர்களை கைது செய்த காவலருக்கு சல்யூட் – நயினார் பாராட்டு!

மதுராந்தகம் இடைத்தேர்தலில் திமுக தோற்றால் கட்சி பதவியை ராஜினாமா செய்ய தயாரா?  – உதயநிதிக்கு ஆதவ் அர்ஜுனா சவால்!

பயங்கரவாதத்திற்கு எதிராக தற்காத்துக் கொள்ளும் உரிமையை இந்தியா பயன்படுத்தும் – ஜெய்சங்கர் எச்சரிக்கை!

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டி – இந்தியா அபார வெற்றி!

திருச்செந்தூர் முருகன் கோயிலில் ரகசியமாக நடந்த அறங்காவலர் குழு தேர்வை ரத்து செய்யாவிட்டால் போராட்டம் – பாஜக எச்சரிக்கை!

டெங்கு காய்ச்சல் பரவல் எதிரொலி – சென்னை அண்ணா பல்கலை மாணவர்களுக்கு 4 நாட்கள் விடுமுறை!

‘தாய்மாமன் தங்க மோதிரம்’ திட்டம் – முதல்வரின் மதுரை வருகையை முன்னிட்டு பலத்த பாதுகாப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies