கர்நாடகாவில் விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தின்போது கல் வீசப்பட்டதாகக் கூறப்படும் சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவித்துப் போராட்டத்தில் ஈடுபட்ட இந்து அமைப்பினர் மீது போலீசார்த் தடியடி நடத்தினர்.
கர்நாடகாவின் மத்தூரில் விநாயகர் சிலை விஜர்சன நிகழ்வின் போது நேற்று கல் வீசப்பட்டதாகக் கூறப்பட்டது.
இது அப்பகுதியில் பதற்றம் உண்டான நிலையில், போலீசார்க் குவிக்கப்பட்டனர். மேலும் அசம்பாவிதங்களைத் தவிர்ப்பதற்காக தடை உத்தரவு பிறக்கப்பட்ட நிலையில், கல்வீச்சு சம்பவத்தைக் கண்டித்து இந்து அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கூட்டம் கட்டுக்கடங்காத அளவுக்கு அதிகரித்ததை அடுத்து, வேறு வழியின்றி போலீசார் தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்தனர்.