ராணுவ வீரர்களுக்கான பயிற்சி நிறைவு விழா - வியக்க வைத்த சாகச நிகழ்ச்சி!
Sep 9, 2025, 08:30 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

ராணுவ வீரர்களுக்கான பயிற்சி நிறைவு விழா – வியக்க வைத்த சாகச நிகழ்ச்சி!

Web Desk by Web Desk
Sep 8, 2025, 06:36 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சென்னை  பரங்கிமலையில் உள்ள ராணுவ பயிற்சி மையத்தில், ராணுவ அதிகாரிகளின் அணிவகுப்பு மற்றும் பட்டமளிப்பு விழா வெகு சிறப்பாக நடைபெற்றது. இது குறித்த செய்தித் தொகுப்பை பார்க்கலாம்.

சென்னை  பரங்கிமலையில் ராணுவ பயிற்சி மையம் உள்ளது. நாடு முழுவதும் இருந்து வீரர், வீராங்கனைகள் இங்கு ராணுவ பயிற்சி பெறுவது வழக்கம். அதன்படி, 130 ஆண் அதிகாரிகள், 25 பெண் அதிகாரிகள், இந்தியாவின் நட்பு நாடுகளைச் சேர்ந்த 21 பேர் என, மொத்தம் 176 பேர், 49 வாரப் பயிற்சியை முடித்தனர்.

அவர்களுக்கான பட்டமளிப்பு விழா ராணுவ மைதானத்தில் நடைபெற்றது. அப்போது, ராணுவ வீரர்கள் மேற்கொண்ட இருசக்கர வாகன அணிவகுப்பு அனைவரையும் வெகுவாகக் கவர்ந்தது.

அதேபோல, ராணுவ வீரர்கள் தற்காப்புக் கலைகளை நிகழ்த்திக் காட்டினர். மேலும், குதிரை சவாரி செய்தும், மிடுக்காக அணிவகுத்தும் அசத்தினர்.

இந்தப் பட்டமளிப்பு விழாவில் சிறப்பு விருந்தினராக இந்திய விமானப்படைத் தளபதி ஏர் சீஃப் மார்ஷல் அமர்ப் ப்ரீத் சிங் கலந்து கொண்டார். அவர் புதிதாக பொறுப்பேற்கவுள்ள அதிகாரிகளுக்கு வாழ்த்து தெரிவித்துப் பட்டங்களை வழங்கினார்.

இந்த நிகழ்வில், பயிற்சி முடித்த வீரர்களின் பெற்றோர்களும், உறவினர்களும் கலந்துகொண்டனர். அப்போது, அவர்கள் கண்கலங்கியபடி வீரர்களை  கட்டிப்பிடித்து தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

வடசென்னையைச் சேர்ந்த கூலித் தொழிலாளியின் மகனான வரதராஜன் என்பவர், ராணுவ அதிகாரியாகப் பொறுப்பேற்றுக் கொண்டார். இந்த நாளை மறக்க முடியாது எனவும், நாட்டிற்காகச் சிறந்த முறையில் பணியாற்றுவேன் என்றும் அவர்  கூறினார்.

இதேபோல், ராணுவ அதிகாரியாகப் பணியைத் தொடரவுள்ள வரப்பிரசாத் என்பவர், தனது பெற்றோரின் தியாகமும், OTA-ல் பெற்ற பயிற்சியுமே தன்னை இந்த நிலைக்குக் கொண்டு வந்துள்ளதாகத் தெரிவித்தார். தனது நாட்டுக்காக முழு மனதோடு சேவையாற்ற போவதாகவும் அவர்கூறினார்.

இப்படி, பயிற்சி முடித்த அனைத்து வீரர்களும், அவர்களது பெற்றோர்களும் மகிழ்ச்சியுடனும், உணர்ச்சிவசப்பட்ட நிலையிலும் இருந்தனர். இந்த 176 வீரர்களின் பயற்சி மட்டும்தான் தற்போது முடிந்துள்ளது. நாட்டிற்கு அவர்கள் ஆற்றவுள்ள பணி இனிதான் தொடங்கவுள்ளது.

Tags: indian armyTraining Completion Ceremony for Army Soldiers - An Amazing Adventureசென்னை  பரங்கிமலையில் உள்ள ராணுவ பயிற்சி மையம்OTA
ShareTweetSendShare
Previous Post

கர்நாடகா : போராட்டத்தில் ஈடுபட்ட இந்து அமைப்பினர் மீது போலீசார் தடியடி!

Next Post

பெருமையை இழக்கும் ஈத்தாமொழி தேங்காய்கள் : வேதனையில் விவசாயிகள்!

Related News

புகார் தொடர்பாக நடவடிக்கை எடுக்கவில்லை என வழக்கு – நீதிமன்ற உத்தரவுப்படி காஞ்சிபுரம் டிஎஸ்பி சங்கர் கணேஷ் கைது!

மதுரை மாநகராட்சியில் ரூ.200 கோடி ஊழல் விவகாரம் – மேலும் 3 பேர் கைது!

திருப்பரங்குன்றம் மலையில் ஆடு, கோழி பலியிட தடை கோரிய வழக்கு – தீர்ப்பு ஒத்திவைப்பு!

பதவி விலகினார் ஜப்பான் பிரதமர் : இஷிபாவின் திடீர் முடிவுக்கு காரணம் என்ன?

உலகத் தலைவர்களுக்கு ஹெட்மாஸ்டர் பிரதமர் மோடி : புகழ்ந்து தள்ளிய இஸ்ரேல் பாதுகாப்பு நிபுணர்!

இமயமலையை குடைந்து ரயில்வே சுரங்க பாதை : மலைக்க வைக்கும் ரயில்வேதுறையின் மகத்தான சாதனை!

Load More

அண்மைச் செய்திகள்

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுடன் செங்கோட்டையன் சந்திப்பு?

பொருளாதார நடவடிக்கை வெளிப்படையாக இருக்க வேண்டும் – பிரிக்ஸ் மாநாட்டில் ஜெய்சங்கர் வலியுறுத்தல்!

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பஞ்சாப், ஹிமாச்சலப்பிரதேசம் – பிரதமர் மோடி இன்று ஆய்வு!

ஜிஎஸ்டி வரி சீர் திருத்தம் – உணவு பொருட்களின் வரி விதிப்பு மாற்றங்கள் குறித்த பட்டியல்!

சமூக வலைதளங்களுக்கு விதிக்கப்பட்ட தடை ரத்து – நேபாள அரசு அறிவிப்பு!

என்டிஏ கூட்டணி வேட்பாளர் சி.பி.ராதாகிருஷ்ணன் சிறந்த குடியரசு துணைத் தலைவராக செயல்படுவார் – பிரதமர் மோடி

குடியரசு துணை தலைவர் தேர்தல் – இன்று வாக்குப்பதிவு!

உதவிக்கரம் நீட்டிய இந்திய ராணுவம்

பேஸ்புக், யூடியூப்பிற்கு தடை : போர்க்கோலம் பூண்ட GEN-Z இளைஞர்கள் – கலவர பூமியான நேபாளம் பற்றி எரியும் காத்மாண்டு!

அவமானப்படுத்திய FORD அலறவிட்ட ரத்தன் டாடா : உதாசீனங்களை உரமாக்கி சாதனை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies