என்டிஏ கூட்டணி சார்பில் போட்டியிடும் சி.பி.ராதாகிருஷ்ணன், சிறந்த குடியரசு துணை தலைவராக செயல்படுவார் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
டெல்லியில் தேசிய ஜனநாயக கூட்டணி எம்பிக்கள் கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில், பிரதமர் மோடி, குடியரசு துணை தலைவர் தேர்தலில் போட்டியிடும் என்டிஏ கூட்டணி வேட்பாளர் சி.பி.ராதாகிருஷ்ணன், முன்னாள் பிரதமர் தேவகவுடா, மத்திய அமைச்சர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இந்த கூட்டத்துக்கு பிறகு தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்ட பிரதமர் மோடி, டெல்லியில் நடைபெற்ற கூட்டத்தில் தேசிய ஜனநாயக கூட்டணியைச் சேர்ந்த அனைவரும் பங்கேற்றதாக தெரிவித்துள்ளார். என்டிஏ கூட்டணி வேட்பாளர் சி.பி.ராதா கிருஷ்ணன், சிறந்த குடியரசு துணைத் தலைவராக இருப்பார் என்றும், தனது அறிவு மற்றும் நுண்ணறிவால் குடியரசு துணைத் தலைவர் பதவியை வளப்படுத்துவார் எனவும் மக்கள் நம்புவதாக பிரதமர் மோடி பதிவிட்டுள்ளார்.