கண்துடைப்பு நடவடிக்கைகளால் பள்ளிக்குழந்தைகளின் பாதுகாப்பைக் காவு வாங்கும் திமுக அரசு - நயினார் நாகேந்திரன் விமர்சனம்!
Mar 15, 2026, 07:50 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

கண்துடைப்பு நடவடிக்கைகளால் பள்ளிக்குழந்தைகளின் பாதுகாப்பைக் காவு வாங்கும் திமுக அரசு – நயினார் நாகேந்திரன் விமர்சனம்!

Ramamoorthy S by Ramamoorthy S
Sep 9, 2025, 08:00 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கண்துடைப்பு நடவடிக்கைகளால் பள்ளிக்குழந்தைகளின் பாதுகாப்பை திமுக அரசு! காவு வாங்குவதாக தமிழக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.

திருப்பத்தூர் மேல்சாணங்குப்பம் அரசுத் தொடக்கப்பள்ளியில் மதுபோதையில் 5-ஆம் வகுப்பு மாணவியிடம் தலைமை ஆசிரியர் திரு. பாரத் அம்பேத்கர், பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக வெளிவந்துள்ள செய்தி பேரதிர்ச்சியளிக்கிறது. அதிலும் அந்தத் தலைமையாசிரியர் தொடர்ந்து 4 பள்ளிகளில் பாலியல் புகாரில் சிக்கி இடமாற்றம் செய்யப்பட்டு 15 நாட்களுக்குள் மீண்டும் இக்குற்றத்தில் ஈடுபட்டிருப்பது, திராவிட மாடல் ஆட்சியில் அரசுப்பள்ளிகள் சீரழிந்துள்ளதைக் காட்டுகிறது என தெரிவித்துள்ளார்.

பணிநேரத்தில் மது அருந்தியது தொடங்கி, தொடர்ந்து மாணவர்களிடம் அத்துமீறுவது வரையிலான கொடூரச் செயல்களில் ஈடுபடும் அளவிற்கு அந்தத் தலைமையாசிரியருக்கு துணிச்சல் எப்படி வந்தது? என கேள்வி எழுப்பியுள்ளார்.

ஏழை எளிய அரசுப்பள்ளி மாணவர்கள் பாதுகாப்பைத் தூக்கியெறிந்து, விளம்பரத்தை மட்டும் தூக்கிப்பிடிக்கும் திமுக ஆட்சியில் எப்படியானாலும் தப்பித்துவிடலாம் என்ற எண்ணம் தான் குற்றம் புரியத் தூண்டியதா? என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

இது போன்ற குற்றங்கள் வெளிவரும் போதெல்லாம், கண்துடைப்புக்காக கைது செய்துவிட்டு, “பாலியல் குற்றத்தில் ஈடுபடும் ஆசிரியர்களின் கல்விச் சான்றிதழ் ரத்து செய்யப்படும்” என முழங்குவதும், பின் செய்தியடங்கியதும், குற்றம்புரிந்த ஆசிரியரை வேறு கல்விநிலையத்துக்கு இடமாற்றம் செய்து, மாணவர்களின் பாதுகாப்பைப் பலியிடுவதும் தான் பள்ளிக் கல்வித்துறையின் பொற்காலமா? என வினவியுள்ளார்.

தேர்தல் விளம்பரங்களில் ‘அப்பா’ எனும் வேடம் தரிக்கும் கடனுக்காகவாவது, அரசுப் பள்ளிக் குழந்தைகளின் பாதுகாப்பை முதல்வர் ஸ்டாலின்  கண்டுகொள்வாரா? கல்வி கற்பிக்கும் பள்ளிக்கூடங்களையே மாணவர்கள் பாதுகாப்பைக் காவு வாங்கும் கூடாரங்களாய் மாற்றிய அறிவாலய அரசின் மெத்தனமே அதன் பகல் கனவுகளுக்கு சமாதி கட்டும் என்றும் நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார்.

Tags: Bharat AmbedkarDMK governmentsexual harassment.Tamil Nadu BJP state president Nainar NagendranTirupattur Melchananguppam Government Primary School
ShareTweetSendShare
Previous Post

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுடன் செங்கோட்டையன் சந்திப்பு?

Next Post

மதுரை மாநகராட்சியில் ரூ.200 கோடி ஊழல் விவகாரம் – மேலும் 3 பேர் கைது!

Related News

மோடியின் நவீன ராஜதந்திரம் – இந்தியாவுடன் இணக்கமாக இருக்க விரும்பும் ஈரான்!

ஐசிசி டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியினர் புகழ்பெற்ற சித்திவிநாயகர் கோயிலில் வழிபாடு!

கேரள மாநிலம் கருநாகப்பள்ளியில் பிரபல ரவுடி கும்பல் தலைவன் பட்டப்பகலில் வெட்டிக்கொலை!

சமையல் எரிவாயு குறித்த அச்சம் வேண்டாம் – மத்திய அரசு

திமுக மாணவரணி செயலாளர் பொறுப்பில் இருந்து ராஜீவ்காந்தி திடீர் விடுவிப்பு!

தூத்துக்குடி கொடூரம்.. அமைச்சர் கீதா ஜீவன், கனிமொழி எம்பி ராஜினாமா செய்ய வேண்டும் – பாஜக மாநில துணை தலைவர் வலியுறுத்தல்

Load More

அண்மைச் செய்திகள்

தூத்துக்குடியில் மாணவிக்கு நேர்ந்த கொடூரம் – 4 நாட்களாகியும் குற்றவாளிகளை கைது செய்ய முடியாமல் திணறும் போலீசார்..பொதுமக்கள் சாலைமறியல்!

மதுரை விமான நிலையத்தில் புதிய வான் கட்டுப்பாட்டு கட்டிடத்தை திறந்து வைத்த மத்திய அமைச்சர் ராம் மோகன் நாயுடு!

AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி எதிர்க்கட்சிகள் பொய் பிரச்சாரம் செய்கிறது – மத்திய அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் குற்றச்சாட்டு

ஷில்லாங் – சில்சார் இடையே அதிவேக 4 வழித்திட்டத்திற்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்!

சண்முக நதி கரையோரம் மலைபோல் தேங்கும் குப்பைகளால் சுகாதார சீர்கேடு!

மலைக்கோயிலில் இந்து முன்னணி சார்பில் தூய்மை பணிகள்!

தூத்துக்குடி கொடூரம் -அதிமுக சார்பில் நீதி வேண்டி வாயில் கருப்பு துணி கட்டி ஆர்ப்பாட்டம்

காதணி விழாவுக்கு ரூ.15 லட்சம் மதிப்பில் அத்தை சீர்வரிசை!

ஆண்டிபட்டி அருகே முற்றிலும் இல்லாமல் போன வைகை அணையின் நீர்வரத்து!

மத்திய விமான போக்குவரத்து அமைச்சருக்கு பாரம்பரிய வரவேற்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies