ஜிம்பாப்வே அணிக்கு எதிரான 3வது டி20 போட்டியில் வெற்றிப் பெற்று, தொடரை இலங்கை அணி கைப்பற்றியுள்ளது.
ஜிம்பாப்வேயில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடிய இலங்கை அணி, முதல் இரண்டு போட்டிகளில் ஒன்றுக்கு ஒன்று எனச் சமநிலையில் இருந்தது.
இந்நிலையில் பரபரப்பாக நடைபெற்ற 3வது போட்டியில் ஜிம்பாப்வே அணியை வீழ்த்தி, 2க்கு ஒன்று என்ற புள்ளிக் கணக்கில் தொடரை இலங்கை அணி கைப்பற்றியது.