தருமபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே விவசாய கிணற்றில் தவறி விழுந்த பசுமாடு உயிருடன் பத்திரமாக மீட்கப்பட்டது.
பூதி அள்ளி கிராமத்தில் வசித்து வரும் ஜெயராமன் என்பவரின் மனைவி அதே பகுதியில் தனது பசு மாட்டை மேய்த்துக் கொண்டிருந்தார்.
அப்போது அங்கிருந்த 60 அடி ஆழ விவசாய கிணற்றில் பசு மாடு தவறி விழுந்து உயிருக்குப் போராடியது. தகவலறிந்து அங்கு சென்ற தீயணைப்புத் துறையினர் பசுமாட்டை கயிறு கட்டி பத்திரமாக மீட்டனர்.