பலவீனமாகும் பூமியின் காந்தபுலம் : விஞ்ஞானிகள் எச்சரிக்கை!
Oct 28, 2026, 03:10 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் உலகம்

பலவீனமாகும் பூமியின் காந்தபுலம் : விஞ்ஞானிகள் எச்சரிக்கை!

Murugesan M by Murugesan M
Sep 9, 2025, 01:23 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

41 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு பூமியின் காந்தப்புலம் சீர்குலைந்தது போல் மீண்டும் ஒரு சம்பவம் நடக்க வாய்ப்புள்ளதாக ஆய்வாளர்கள் எச்சரிக்கின்றனர். அது என்ன காந்தபுலம்…? அதனால் மனிதக் குலத்திற்கு என்ன ஆபத்து என்பதை  தற்போது பார்க்கலாம்.

சூரியனின் கதிரியக்கத்தில் இருந்து பூமியில் வாழும் உயிரினங்களை காக்கவும், நமது கிரகத்தின் துடிக்கும் இதயமாகவும் இருப்பதே இந்தக் காந்தப்புலம்தான். திசைக் காட்டிகள் போன்றவற்றுக்கு வழிகாட்டும் முக்கிய கருவியாகவும் காந்தப்புலம் செயல்படுகிறது.

அவ்வளவு முக்கியத்துவம் கொண்ட பூமியின் காந்தப்புலம் தற்போது பலவீனமடைந்து வருவதாகச் செயற்கைக்கோள் தரவுகள் தெரிவிக்கின்றன. Science Advances வெளியிட்ட சமீபத்திய ஆய்வறிக்கை, Laschamps Excursion என்று அழைக்கப்படும் பூமியின் காந்தப்புலத்தின் தற்காலிகச் சரிவு, ஆதிகால மனிதர்கள் மீது ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தியதாகக் கூறுகிறது.

41 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு பூமியின் காந்தத் துருவங்கள் (Earth’s magnetic poles) கணிக்க முடியாத வகையில் செயல்பட்டதாகவும், விண்வெளியில் லட்சம் ஆண்டுகளுக்கு ஒரு முறை நிகழும், சம்பவத்தால் காந்தப்புலம் தேங்காய் சிதறுவது போல் தனித்தனி துருவங்களாகத் துண்டு துண்டாகப் பிரிந்தது எனவும் கூறப்படுகிறது. இதன் காரணமாகத் தனது பலத்தில் 10 சதவிகிதத்தைக் காந்தப்புலம் இழந்ததாகவும் விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

லாசாம்ப்ஸ் நிகழ்வின் போது, பாதுகாப்பு கவசமாக இருந்த காந்தப்புலம் பலவீனமடைந்ததால், பூமியின் மேற்பரப்பு அதிகளவிலான புறஊதா கதிர்களைப் புவிக்கு திருப்பியது. இது காலநிலையை சீர்குலைத்து, உயிரியல் அமைப்புகளை வெகுவாகப் பாதித்திருக்கலாம் என்றும், துருவப் பகுதிகளில் மட்டுமன்றி, மத்திய மற்றும் பூமத்திய ரேகை, அட்சரேகைகளில் பல வண்ணங்களைப் பிரதிபலிக்கும் auroras தோன்றியிருக்கும் என்றும் கணித்திருக்கிறார்கள்.

இந்த auroras, வானத்தை, மனிதர்களையும், விலங்குகளையும் மயக்கும் ஆபத்தான காட்சியாக மாற்றியிருக்கக் கூடும் என்றும் ஆய்வுகள் தெரிவிக்கின்றன. காந்த மண்டலத்தின் முறிவு அல்லது சரிவு, வளிமண்டலத்தில் வேதியியலை மாற்றியமைத்து, ஓசோன் படலத்தைப் பலவீனப்படுத்தியிருக்கும் என்றும், மரபணு மாற்றங்கள், தோல் புற்றுநோய்கள் மற்றும் பிறப்பு குறைபாடுகளை அதிகரித்திருக்கலாம் என்றும் விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர். இது பூமியைக் கடுமையானதாகவும், கணிக்க முடியாததாகவும் மாற்றியிருக்கிலாம் என்றும் கூறுகின்றனர்.

காந்தப்புலம் பலவீனம் ஐரோப்பாவில் கடுமையாக இருந்ததை, தொல்பொருள் கண்டுபிடிப்புகளும், குகை வாழ்விடங்கள் அதிகரித்ததும் கோடிட்டுக் காட்டுகின்றன.. இது ஆதிகால மனிதர்கள் கதிர்வீச்சு அபாயத்தில் இருந்து தப்பிக்கக் குகைகளை முதன்மை வாழ்விடங்களாகப் பயன்படுத்தியதை காட்டுவதாக விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.

எலும்புக் கருவிகள், உடை வடிவங்களிலிருந்து கிடைத்த சான்றுகள், ஐரோப்பா, மேற்கு ஆசியாவில் வாழ்ந்த Neanderthals மற்றும் Homo sapiens மனிதர்கள் பயன்படுத்திய அதிநவீன ஆடைகள், இரும்புச்சத்து நிறைந்த கனிம நிறமியான காவியின் பயன்பாடு போன்றவை அந்தக் கால கட்டத்தில் கதிர்வீச்சின் அபாயத்தை குறைத்ததாக விஞ்ஞானிகள் குறிப்பிடுகின்றனர்.

காந்தப்புலம் சரிவு, நியாண்டர்தால் மனிதர்களின் அழிவு போன்ற முக்கிய நிகழ்வுகளுக்கு இடையே நேரடித் தொடர்பு இருப்பதாகக் காட்டினாலும், ஆய்வாளர்கள் அவற்றை மறுத்துள்ளனர்.

கடந்த காலங்களைப் போன்று அல்லாமல், நவீன நாகரிகம் செயற்கைக்கோள், விமான போக்குவரத்து மின் கட்டமைப்பு, ஜிபிஎஸ் தொழில்நுட்பம் போன்றவற்றைச் சார்த்திருக்கிறது. இவை அனைத்தும் சூரிய கதிர்வீச்சால் பாதிக்கப்படக் கூடியவையே. இயற்கைக்கு மாறான செயல்பாடு பருவநிலையில் மிகப்பெரிய மாற்றத்தைக் கொண்டுவந்திருப்பதை கண்கூடாகப் பார்க்க முடிகிறது.

அதேபோன்று வானில் நிலவும் நிகழ்வுகள், காந்தபுலத்தைப் பாதிக்குமாயின், பூமி அழிந்து, பல கோடி ஆண்டுகளுக்கு முன்னர் தனது காந்தப் புலத்தை இழந்த செவ்வாயைப் போன்று வறண்டு போய்விடும் என்பதே விஞ்ஞானிகளின் கூற்றாக உள்ளது. தற்போதைய சூழலிலும் காந்தப்புலம் பலவீனமடைந்து வருவதாகக் கிடைத்திருக்கும் தரவுகள், மனிதக் குலத்திற்கு எச்சரிக்கை மணியை அடித்திருக்கிறது.

Tags: பூமியின் காந்தபுலம்விஞ்ஞானிகள் எச்சரிக்கைகாந்தபுலம்EARTHEarth's magnetic field is weakening: Scientists warn
Share
Tweet
SendShare
Previous Post

தருமபுரி : விவசாய கிணற்றில் தவறி விழுந்த பசுமாடு உயிருடன் பத்திரமாக மீட்பு!

Next Post

2023ஆம் ஆண்டு நிகழ்ந்த சாலை விபத்துக்கள் – 77,000 பேர் பலியானதாக தகவல்!

Related News

பிரதமர் நாற்காலியை முடிவு செய்யும் கூட்டணி : இஸ்ரேல் அரசியலை தீர்மானிக்கும் தேர்தல் கணக்கு – சிறப்பு தொகுப்பு!

2026ம் ஆண்டுக்குள் இந்தியா-ஐரோப்பிய ஒன்றிய தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் அமல்படுத்தப்படும் : பியூஷ் கோயல் நம்பிக்கை : சிறப்பு தொகுப்பு!

இஸ்ரேல் நாடாளுமன்ற தேர்தல் – விறுவிறுப்பான வாக்குப்பதிவு!

ஐரோப்பாவை சீர்குலைத்த போராட்டம் : உலகளாவிய நெட்வொர்க்கின் அதிர்ச்சி பின்னணி – சிறப்பு தொகுப்பு!

மதுரை – குருவாயூர் ரயிலில் ‘விஸ்டாடோம்’ பெட்டி : மேற்கு தொடர்ச்சி மலையின் அழகை ரசிக்கும் பயணிகள் சிறப்பு தொகுப்பு!

மேற்காசிய போருக்கு முடிவு எப்போது? அடிபணிய மறுக்கும் ஈரான் – சிறப்பு தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

அரிசி விலையை கட்டுப்படுத்த ஆந்திராவில் இருந்து நெல் மூட்டைகள் கொண்டு வர அனுமதி – அமைச்சர்கள் செங்கோட்டையன், வெங்கட்ரமணன் தகவல்!

அன்பில் மகேஷ் கைதின் போது போலீசாருடன் வாக்குவாதம் – சேகர்பாபு மீது வழக்குப்பதிவு!

ரயிலில் பட்டாசு எடுத்து சென்றால் 3 ஆண்டுகள் சிறை தண்டனை : ரயில்வே பாதுகாப்புப் படை எச்சரிக்கை!

இன்றைய தங்கம் விலை!

கோயிலுக்குள் யாரை அனுமதிக்கலாம் – உயர் நீதிமன்ற மதுரை கிளை விளக்கம்!

மருந்துகளின் அதிகபட்ச சில்லறை விலைக்கும், கொள்முதல் விலைக்கும் இடையே மிகப்பெரிய வித்தியாசம் இருப்பது ஏன்? – உச்ச நீதிமன்றம் கேள்வி!

குற்ற வழக்கு நிலுவையில் இருப்பதை காரணம் காட்டி வெளிநாடு செல்லும் உரிமையை மறுக்கக் கூடாது – உயர் நீதிமன்றம்

அதிக மின் கட்டணம் விதிப்பு – சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு!

தமிழகத்தில் 13 ஆண்டுகளுக்கு பின் ஆட்டோ கட்டணம் உயர்வு!

காவிரியில் உரிய நீரை கர்நாடகா திறக்கவில்லை – உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு அவசர மனுத்தாக்கல்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies