இந்தியர்கள் மிகவும் புத்திசாலிகள் என அமெரிக்காவின் சிகாகோ பல்கலைக்கழகப் பேராசிரியர் ஜான் மியர்ஷைமர் புகழாரம் சூட்டியுள்ளார்.
டிரம்பின் வரிவிதிப்பு குறித்து பேசிய அவர், சீனாவைக் கட்டுப்படுத்துவதே வாஷிங்டனின் முக்கிய நோக்கம் எனவும் ஆனால் அதற்குப் பதிலாக வாஷிங்டனின் கொள்கைகள் ரஷ்யா, இந்தியா, ஈரான் மற்றும் வடகொரியாவைத் தள்ளி வைப்பதாகவும் கூறினார்.
சீனா பொருளாதார ரீதியாகவும் ராணுவ ரீதியாகவும் அமெரிக்காவின் வலிமையான எதிரி எனவும் சீனாவைக் கட்டுப்படுத்த ரஷ்யா மற்றும் இந்தியாவுடன் நல்ல உறவைக் கொண்டிருக்க வேண்டும் எனவும் சுட்டிக்காட்டினார்.
இந்தியா மீது 50% வரிகளை விதித்து இந்தியர்களை சீனர்களின் கைகளில் டிரம்ப் தள்ளியுள்ளார் எனவும் ஜான் மியர்ஷைமர் குற்றம்சாட்டினார்.
இந்தியர்கள், ரஷ்யர்கள் மற்றும் சீனர்கள் அனைவரும் சிறந்த நண்பர்களாக மாறி வருவதாகவும் இது அமெரிக்கத் தேசிய நலனுக்கானதாக இல்லை எனவும் அவர் குறிப்பிட்டார்.
வடகொரியாவும் ஈரானும் அமெரிக்காவிற்கு எதிராக ஒன்றிணைந்துள்ளனர் எனவும் தற்போது இந்தியர்களை அதே கூட்டணிக்குள் தள்ளியது அர்த்தமற்றது எனவும் ஜான் மியர்ஷைமர் சாடினார்.