ஆஸ்திரேலியாவில் வீட்டுக்குள் நுழைந்த பாம்பை சிறுமி லாவகமாக விரட்டும் வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
பாம்பைக் கண்டால் படையும் நடுங்கும் என்பார்கள், ஆனால் இந்தச் சிறுமிக்கோ பாம்பை கண்டு எந்தப் பயமும் இல்லை.
தனது வீட்டுக்குள் பதுங்கியிருந்த பாம்பை கண்ட சிறுமி அது குறித்து தனது தந்தையிடம் தெரிவித்தார். அச்சம் கொள்ளாத தந்தையோ தனது மகளிடம் பாம்பை விரட்டும் படி கூறினார்.
இதையடுத்து அந்தச் சிறுமி துடைப்பானைக் கொண்டு பாம்பை வெளியே விரட்டினார். துளியும் பயமில்லாத அந்த லிட்டில் பிரின்சஸின் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.