சேலத்தில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட இரண்டு பெண்கள் உட்பட 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
ஆந்திராவிலிருந்து சிலர் கஞ்சாவை வாங்கிக் கொண்டு சேலத்தில் விற்பனை செய்து வருவதாக மாநகரக் காவல் ஆணையர் அணில் குமார் கிரிக்கு தகவல் கிடைத்தது.
அதன் பேரில் தனிப்படை அமைத்து விசாரணை மேற்கொண்ட போலீசார், பால கண்ணன், ரமேஷ், தனலட்சுமி உள்ளிட்ட 4 பேரை கைது செய்தனர்.
மேலும் அவர்களிடம் இருந்து 7 லட்சம் ரூபாய் மதிப்புள்ள 20 கிலோ கஞ்சாவையும் பறிமுதல் செய்தனர்.