உக்ரைனில் வெடி பொருட்களை சேமித்து வைத்திருந்த கிடங்கை ரஷ்ய ராணுவம் குறிவைத்து அழித்துள்ளது.
உக்ரைன் – ரஷ்யா இடையிலான தாக்குதல் 3 ஆண்டுகளுக்கு மேல் தொடர்ந்து நடந்து வருகிறது. இதனைக் கட்டுக்குள் கொண்டு வரும் முயற்சிகள் தோல்வியில் தான் முடிந்துள்ளன.
அமெரிக்க அதிபர் டிரம்ப் இது தொடர்பாகப் பேச்சுவார்த்தை நடத்தியும், அது பலனளிக்கவில்லை. ஆனால் இந்தப் போரால் இருநாட்டு மக்களும் கடுமையான பாதிப்பை சந்தித்து வருகின்றனர்.
இந்நிலையில் உக்ரைனின் சேமிப்புக் கிடங்கை ரஷ்ய ராணுவம் குறிவைத்துத் தகர்த்துள்ளது. இந்தத் தாக்குதலில் யாரும் உயிரிழக்கவில்லை எனக் கூறப்படும் நிலையில், வெடிபொருள் கிடங்குகள் வெடித்துச் சிதறின.