நடிகைக் கல்யாணி பிரியதர்ஷன் நடிப்பில் வெளியான லோகா திரைப்படம் 200 கோடியை வசூலித்துள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது.
ஓணம் பண்டிகையையொட்டி ‘லோகா சேப்டர் – 1 சந்திரா’ திரைப்படம் வெளியானது.மலையாளம் மட்டுமல்லாது தமிழ், ஹந்தி ரசிகர்களிடமும் அசத்தலான வரவேற்பைப் பெற்றதால் பல திரையரங்குகளில் காட்சிகள் அதிகரிக்கப்பட்டுள்ளன.
கல்யாணி பிரியதர்ஷனை மையக் கதாபாத்திரமாக வைத்து உருவான இப்படம் வெளியான ஒரே வாரத்திற்குள் 100 கோடி ரூபாயை வசூலித்தது.
இந்நிலையில் படம் வெளியான 10 நாள்களில் 200 கோடியை வசூலித்து இந்தியளவில் பலரையும் திரும்பிப் பார்க்க வைத்துள்ளது.