குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் சி.பி.ராதாகிருஷ்ணன் வெற்றிப் பெறுவார் என உறவினர்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.
தேசிய ஜனநாயகக் கூட்டணியின் குடியரசு துணைத் தலைவர் வேட்பாளராகப் போட்டியிடும் சி.பி.ராதாகிருஷ்ணனின் பிறந்த ஊரான திருப்பூர் மாவட்டம், சந்திராபுரம் பகுதியில் உள்ள அவரது பாரம்பரிய வீட்டின் சிறப்புகளை உறவினர்கள் எடுத்துரைத்துள்ளனர்.
சி.பி.ராதாகிருஷ்ணன் அனைவரிடமும் அன்பாகப் பழகுவார் என்றும், அவரது வீட்டில்தான் அனைத்துச் சுப நிகழ்ச்சிகளும் நடைபெறும் எனத் தெரிவித்துள்ளனர்.
ஆளுநராகப் பொறுப்பு ஏற்பதற்கு முன்பு வீட்டின் அருகே உள்ள பிள்ளையார்க் கோயிலில் சாமி தரிசனம் செய்துவிட்டுச் சென்றார் எனவும் கூறியுள்ளனர்.
மேலும், குடியரசு துணைத் தலைவராக சி.பி.ராதாகிருஷ்ணன் வெற்றிப் பெறுவார் என்றும், அவரை நினைத்துத் தங்களுக்கு பெருமையாக உள்ளது எனவும் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.