திமுக அரசு, ஒடுக்கு முறை ஆட்சி செய்வதாகத் தூய்மை பணியாளர்கள் குற்றம்சாட்டியுள்ளார்.
திமுக அரசைக் கண்டித்துச் சென்னை மூர்மார்க்கெட் பகுதியில் 2வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்ட தூய்மைப் பணியாளர்களை போலீசார் கைது செய்தனர்.
அப்போது பேசிய தூய்மைப் பணயாளர்கள், கொருக்குப்பேட்டையில் உள்ள தூய்மை பணியாளர் வீட்டில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்ட 13 பெண் பணியாளர்களை போலீசார் கைது செய்ததாகவும் வேதனை தெரிவித்தனர்.
2 மாதங்களாகப் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால் தங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், குழந்தைகளை படிக்க வைக்ககூட முடியாத அவலம் ஏற்பட்டுள்ளதாகவும் கூறினர்.