வழக்கறிஞர்கள் மீது போலீசார் தாக்குதல் நடத்தியதாகத் தொடரப்பட்ட வழக்கில் ஒரு நபர் ஆணைய விசாரணைக்குத் தடை விதித்துச் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஊதிய உயர்வு உள்ளிட்ட காரணங்களுக்காகச் சென்னையில் தூய்மைப் பணியாளர்கள் போராட்டம் நடத்தினர். இந்தப் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்த வழக்கறிஞர்களைப் போலீசார் தாக்கியதாகக் கூறப்படுகிறது.
இது தொடர்பாக விசாரணை நடத்த ஒரு நபர் ஆணையத்தை அமைத்து நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில் அதற்குத் தடைவிதிக்குமாறு போலீசார் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம் ஒரு நபர் ஆணையத்தை நிறுத்தி வைத்து உத்தரவிட்டது.