நேபாள நிதியமைச்சரை போராட்டக்காரர்கள் துரத்தி துரத்தி கொடூரமாகத் தாக்கிய காட்சிகள் வெளியாகி உள்ளன.
நேபாளத்தில் யூட்யூப், இன்ஸ்டாகிராம், பேஸ்புக் உள்ளிட்ட 26 சமூகவலைதளச் செயலிகளுக்கு தடை விதிக்கப்பட்டதால் அங்கு மிகப்பெரிய போராட்டம் வெடித்தது.
இதையடுத்துச் சமூக வலைதளங்கள் மீதான தடை நீக்கப்பட்டது. இருப்பினும் ஆயிரக்கணக்கான இளைஞர்கள் தொடர்ப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்நிலையில் நேபாள நிதியமைச்சர் பிஷ்ணு பவுடலைப் போராட்டக்காரர்கள் வீதியில் துரத்தி துரத்தி கொடூரமாகத் தாக்கிய காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளன.