நாமக்கல் மாவட்டம், பள்ளிப்பாளையம் அருகே 3ம் வகுப்பு மாணவியை அடித்ததாகக் கூறி தனியார் பள்ளியை முற்றுகையிட்ட பெற்றோர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
ஜீவா செட்டு என்ற பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் பள்ளி ஒன்றில் பிரகாஷ் என்பவரின் மகள் 3ம் வகுப்பு படித்து வந்துள்ளார்.
இவர் பெல்ட் அணியாத காரணத்தால் ஆசிரியர் ஒருவர் சரமாரியாக தாக்கியதாகக் கூறப்படுகிறது.
மாணவியின் உடலில் காயங்களும், வீக்கங்களும் இருந்ததை அறிந்த பெற்றோர் பள்ளியை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
அப்போது சகப் பெற்றோர்களும் ஆதரவு தெரிவித்ததால் அங்கு அசாதாரண சூழல் நிலவியது.