குடியரசுத் துணைத் தலைவர் தேர்தலில் வெற்றிப் பெற்றுள்ள சி.பி.ராதாகிருஷ்ணனுக்குப் பிரதமர் மோடி நேரில் வாழ்த்து தெரிவித்தார்.
டெல்லியில் மத்திய அமைச்சர் பிரல்ஹாத் ஜோஷி இல்லத்தில் சந்திப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிலையில், சி.பி.ராதாகிருஷ்ணனை பிரதமர் மோடி நேரில் வாழ்த்தினார்.
இந்திய அரசியல் சாசனத்தில் இரண்டாவது மிகப்பெரிய பொறுப்பான குடியரசு துணைத் தலைவர் பதவியில் சிறப்புற செயல்பட சி.பி.ராதாகிருஷ்ணனுக்குப் பூங்கொத்து கொடுத்துப் பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்தார்.
இதேபோல், மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா, மத்திய அமைச்சர்கள் ராஜ்நாத் சிங், அமித் ஷா, எல்.முருகன் உள்ளிட்ட பலரும் சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு நேரில் வாழ்த்து தெரிவித்தனர்.