குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் சி.பி.ராதாகிருஷ்ணன் வெற்றிப் பெற்றதை அடுத்து சென்னைக் கமலாலயத்தில் பாஜகவினர்க் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.
குடியரசு துணைத் தலைவர் தேர்தல் வாக்குப்பதிவு நடத்தப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன. இதில், 452 வாக்குகள் பெற்றி தேசிய ஜனநாயகக் கூட்டணி கட்சி வேட்பாளர் சி.பி.ராதாகிருஷ்ணன் அமோக வெற்றிப் பெற்றார்.
இந்நிலையில், அவரது வெற்றியை சென்னைக் கமலாலயத்தில் பாஜகவினர்ப் பட்டாசு வெடித்துக் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.
பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் நிர்வாகிகளுக்கு இனிப்பு வழங்கி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.