குடியரசு துணைத் தலைவராக சி.பி.ராதாகிருஷ்ணன் வெற்றிப் பெற்றதை, தமிழகம் முழுவதும் பாஜகவினர் உற்சாகமாகக் கொண்டாடினர்
வேலூர் கிரீன் சர்கிள் பகுதியில் 30- க்கும் மேற்பட்ட பாஜகவினர் பட்டாசு வெடித்தும், பொது மக்களுக்கு இனிப்புகளை வழங்கியும் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். இதேபோல் குடியாத்தம் நகரிலும் பாஜகவினர் உற்சாகக் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதேபோல் கோவைக் காந்திபுரம் பகுதியில் பொதுமக்களுக்குப் பாஜகவினர் இனிப்புகள் வழங்கிக் கொண்டாடினர். அப்போது பேட்டியளித்த கோவை மாவட்ட பாஜக தலைவர் ரமேஷ் குமார், கட்சி பாகுபாடு இன்றி சி.பி.ராதாகிருஷ்ணனின் வெற்றியை அனைவரும் கொண்டாடுவதாகத் தெரிவித்தார்.
சேலம் மாவட்டம் மரவநேரி பகுதியில் பாஜகவினர் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். சுற்றுச்சூழல் அணியின் மாநில அமைப்பாளர் கோபிநாத், மாநகர மாவட்ட பாஜக தலைவர் சசிகுமார் உள்ளிட்டோர் இனிப்புகள் வழங்கி மகிழ்ந்தனர்.