இந்தியா மீது 100 சதவீதம் வரி விதிக்குமாறு ஐரோப்பிய ஒன்றியத்தை அமெரிக்க அதிபர் டிரம்ப் வலியுறுத்தியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
ரஷ்யாவிடம் இருந்து இந்தியா, சீனா ஆகிய நாடுகள் அதிகளவில் கச்சா எண்ணெய் வாங்குவதால், உக்ரைன் போர் தற்போது வரை நீடித்து வருவதாக டிரம்ப் குற்றம்சாட்டி வருகிறார்.
இதனிடையே, வாஷிங்டன் சென்றுள்ள ஐரோப்பிய ஒன்றிய அதிகாரிளுடன் அதிபர் டிரம்ப் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது, இந்தியா, சீனா ஆகிய நாடுகள் மீது 100 சதவீதம் வரி விதிக்குமாறு ட்ரம்ப் வலியுறுத்தியதாக ஐரோப்பிய ஒன்றிய தூதர் தெரிவித்துள்ளார்.