சீனாவின் ஹெனான் பகுதியில் சிறுவனை பத்திரமாக கவனித்துக் கொண்ட காவலர்களின் செயலுக்குப் பாராட்டு குவிந்து வருகிறது.
ஹெனான் பகுதியில் உணவு டெலிவரி செய்யும் பெண்மணி ஒருவர், பணியின்போது தனது மகனையும் உடன் அழைத்துச் சென்றுள்ளார். திடீரெனப் பெய்த மழை காரணமாக, அருகிலிருந்த காவல்நிலையத்தில் மகனை விட்டுச்சென்றார்.
அப்போது, மழையில் நனைந்திருந்த சிறுவனுக்கு உடைமாற்றிய காவலர்கள், சிறுவனை தூங்க வைத்தனர். பின்னர் தாய் வந்தவுடன் பாதுகாப்பாகச் சிறுவனை ஒப்படைத்தனர்.
இதுதொடர்பான காட்சி வெளியான நிலையில், காவலர்களின் செயலுக்குப் பாராட்டு குவிந்து வருகிறது.