தியாகி இமானுவேல் சேகரன் நினைவு தினத்தை ஒட்டி ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் 7 ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
பரமக்குடியில் தியாகி இமானுவேல் சேகரனாரின் 68வது நினைவு தினம் நாளை அனுசரிக்கப்பட உள்ளது.
இதில் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள், சமுதாய அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்த உள்ளனர்.
இதையொட்டி, சட்டம்-ஒழுங்கைப் பராமரிக்கும் வகையிலும், அசம்பாவிதங்கள் ஏதும் நடக்காமல் தடுக்கும் வகையிலும் சுமார் 7 ஆயிரத்திற்கும் அதிகமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
மேலும் 500 சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுக் கண்காணிக்கப்பட்டு வருகிறது.