டெல்லியில் புதிதாக வாங்கிய காரின் டயரில் எலுமிச்சை பழத்தை வைத்து நசுக்கிய சம்பவம் விபரீதத்தில் முடிந்துள்ளது.
டெல்லியின் நிர்மன் விஹாரில் உள்ள மஹிந்திரா ஷோரூமில் மாணி பவார் என்பவர், புதிய தார் காரை டெலிவரி எடுத்துள்ளார்.
காரை வெளியே எடுப்பதற்கு முன், டயரில் எலுமிச்சையை வைத்து காரை ஓட்டிய மாணி பவாரின் மனைவி, ஆக்சிலரேட்டரை தவறுதலாக வேகமாக அழுத்தியுள்ளார்.
இதனால் மாணி பவாரின் 27 லட்சம் மதிப்புள்ள தார் கார் ஷோரூமின் முதல் மாடியில் இருந்து கீழே விழுந்து விபத்துக்குள்ளானது.
காரில் இருந்த ஏர் பேக் உடனடியாக வெளியே வந்ததால், மாணி பவாரின் மனைவி மற்றும் ஷோரூம் ஊழியர் இருவரும் லேசான காயங்களுடன் உயிர் தப்பியுள்ளனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.