பொறாமையின் காரணமாக செங்கோட்டையன் தடம் மாறி விட்டார் என அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் விமர்சித்துள்ளார்.
இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், மூத்த முன்னோர்கள் இப்படி செய்தால் சாதாரண தொண்டர்கள் எங்கே போக முடியும் என்றும், எடப்பாடி பழனிசாமியை மாற்ற சொல்பவர்களை மக்கள் மாற்றி விடுவார்கள் என்றும் தெரிவித்தார்.
எடப்பாடி பழனிசாமியை அசைத்துப் பார்க்கலாம் என கனவு கண்டால் தோற்பது நீங்கள்தான் என்றும், ஒற்றுமை என்ற பெயரில் அதிமுகவுக்கு பின்னடைவை ஏற்படுத்த நினைத்தால் தோல்வியே வரும் என்றும் ஆர்.பி.உதயகுமார் குறிப்பிட்டார்.