75-வது பிறந்தநாளை கொண்டாடும் ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பாகவத்திற்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வலைதள பதிவில், ஆர்.எஸ்.எஸ். அமைப்பை வலிமைப்படுத்துவதில் மோகன் பாகவத் முக்கிய பங்காற்றியதாக கூறியுள்ளார்.
தமக்கு வழங்கப்பட்ட பொறுப்புகள் ஒவ்வொன்றையும் மோகன் பாகவத் மிகுந்த அர்ப்பணிப்பு மற்றும் சிரத்தையுடன் மேற்கொண்டதாக தெரிவித்துள்ள மோடி,
ஆர்.எஸ்.எஸ்., அமைப்பின் தலைவராக நேர்மை, வலிமை, ஆழ்ந்த ஞானம் மற்றும் இரக்க குணத்துடன் அவர் பணியாற்றி வருவதாக குறிப்பிட்டுள்ளார்.
RSS எனப்படும் ஆலமரத்தின் வேர்கள் நம்பிக்கையில் நங்கூரமிடப்பட்டுள்ளதால் அவை ஆழமாகவும் வலிமையாகவும் இருப்பதாகவும், பொதுக்கூட்டங்களில் கலந்துகொண்டு மக்களுடன் அவர் கலந்துரையாடுவது, இன்றைய ஆற்றல் மிக்க டிஜிட்டல் உலகில் மிகவும் பயனுள்ளதாக அமைந்திருப்பதாக தெரிவித்துள்ளார்.
மிகுந்த ஞானமும், கடின உழைப்பும் கொண்ட ஒருவரை நாம் தலைவராக பெற்றிருக்கிறோம் எனவும், அவர் நம்மை சிறப்பாக வழிநடத்தி வருவதாகவும் பிரதமர் மோடி கூறியுள்ளார்.
மேலும், ‘ஒரே பாரதம் உன்னத பாரதம்’ என்ற கொள்கைக்கு மோகன் பாகவத் எப்போதுமே குரல் கொடுத்து வருவதாகவும் குறிப்பிட்டுள்ள பிரதமர் மோடி, வசுதைவ குடும்பகத்தின் வாழும் உதாரணம் மோகன் பாகவத் எனவும் புகழாரம் சூட்டியுள்ளார்.