பாமக நிறுவனர் ராமதாஸின் அறிவிப்பு கட்சி விதிகளுக்கு எதிரானது என, அக்கட்சியின் வழக்கறிஞர் பாலு தெரிவித்துள்ளார்.
சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், பாமக விதியின் படியும், கட்சி சட்டத்தின் படியும், கட்சி நிர்வாக பணிகளை மேற்கொள்ளக்கூடிய அதிகாரங்கள் பொதுக்குழுவால் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர், செயலாளர், பொருளாளர்களுக்கு மட்டுமே உள்ளது என தெரிவித்தார்.
மருத்துவர் ஐயாவின் அறிவிப்பு கட்சி விதிகளுக்கு எதிரானது ; அந்த அறிவிப்பு பாமக கட்சியை கட்டுப்படுத்தாது என்றும் அவர் தெளிவுபடுத்தினார்.
அன்புமணிக்கு உளவு பார்க்கும் பழக்கம் கிடையாது என்றும், அதில்* *விருப்பமும் கிடையாது, நாட்டமும் கிடையாது அன்புமணி உளவு பார்த்து இருந்தால் இப்படி ஒரு சூழல் இருந்திருக்காது என்றும் அவர் கூறினார்.
*பாமகவில் நிலவி வந்த பல்வேறு குழுப்பங்களுக்கு தேர்தல் ஆணையம் மூலம் நல்ல முடிவு கிடைத்துள்ளது என்றும், தேர்தல் ஆணையம் கடிதத்தை உரிய நேரத்தில் வெளியிட உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.