முதலமைச்சர் ஸ்டாலின் வருகையை ஒட்டி கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் ஜிஆர்டி சாலையில் ஏற்பட்ட போக்குவரத்து நெரிசலில் நோயாளியை ஏற்றி வந்த ஆம்புலன்ஸ் சிக்கி கொண்டது.
ஓசூரில் தொழில் முனைவோர் மாநாட்டை தொடங்கி வைப்பதற்காக முதலமைச்சர் ஸ்டாலின் அங்கு சென்றார். முதலமைச்சரின் வருகையை ஒட்டி, ஓசூர் ஜிஆர்டி சாலையில் போக்குவரத்து தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. இதனால் அப்பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
அப்போது நோயாளியை ஏற்றி வந்த ஆம்புலன்ஸ், போக்குவரத்து நெரிசலில் சிக்கிக் கொண்டது. முதலமைச்சரின் கான்வாய் சென்றதை அடுத்து, அங்கு வாகனங்கள் செல்ல அனுமதிக்கப்பட்டன. இதையடுத்து 30 நிமிடங்களுக்கு பிறகு ஆம்புலன்ஸ் அங்கிருந்து சென்றது.