கத்தாரில் ஹமாஸ் தலைவர்களை குறிவைத்து இஸ்ரேல் நடத்திய தாக்குதலால், பணயக் கைதிகளை விடுவிப்பதற்கான முயற்சி பாதிக்காது என, அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார்.
கத்தார் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்திய சம்பவத்திற்கு பல்வேறு உலக நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்து வரும் நிலையில், இஸ்ரேல் – ஹமாஸ் இடையேயான மத்தியஸ்த முயற்சி நிறுத்தப்பட்டுள்ளதாக கத்தார் தூதர் குழு அறிவித்துள்ளது.
இந்நிலையில், வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களிடம் பேசிய அமெரிக்க அதிபர் டிரம்ப், கத்தாரில் ஹமாஸ் தலைவர்களை குறிவைத்து இஸ்ரேல் நடத்திய தாக்குதலால் பணயக் கைதிகளை விடுவிப்பதற்கான முயற்சி பாதிக்காது எனக் கூறினார். போலந்து மீதான ரஷ்ய ட்ரோன் தாக்குதல் தவறுதலாக நடந்திருக்கலாம் எனக்கூறிய டிரம்ப், ட்ரோன் தாக்குதல் பிரச்னை விரைவில் முடிவுக்கு கொண்டு வரப்படும் என்றும் தெரிவித்தார்.
மேலும், சார்லி கிர்க்கை சுட்டுக்கொன்ற மனித மிருகத்தை விரைவில் கண்டுபிடிப்போம் எனவும் அதிபர் டிரம்ப் குறிப்பிட்டார்.