நாட்டின் 15வது குடியரசு துணை தலைவராக சிபி.ராதாகிருஷ்ணன் பதவியேற்றார்.
குடியரசு துணை தலைவர் தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளரான சி.பி.ராதாகிருஷ்ணன் வெற்றி பெற்றார். இந்நிலையில், டெல்லியில் உள்ள குடியரசு தலைவர் மாளிகையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் குடியரசு துணை தலைவராக சி.பி.ராதாகிருஷ்ணன் பதவியேற்றார். அவருக்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு பதவி பிரமாணம் செய்து வைத்தார்.
பதவியேற்பு விழாவில், பிரதமர் மோடி மற்றும் மத்திய அமைச்சர்கள் அமித்ஷா, ராஜ்நாத் சிங், ஜெ.பி.நட்டா, எல்.முருகன், முன்னாள் குடியரசு துணை தலைவரான ஜெகதீப் தன்கர், வெங்கையா நாயுடு, பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், மூத்த தலைவர் ஹெச்.ராஜா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.