வாக்கு திருட்டு நடந்ததாக ராகுல் காந்தி வெளியிட்ட PDF மியான்மரில் தயாரிக்கப்பட்டதாகப் பாஜக குற்றஞ்சாட்டி உள்ளது. காங்கிரஸ் கட்சியும், ராகுல் காந்தியும் அந்நிய சக்திகளால் இயக்கப்படுவது நிரூபணமாகி உள்ளதாகவும் பாஜக தெரிவித்துள்ளது. விரிவாகப் பார்க்கலாம் இந்தச் செய்தித்தொகுப்பில்.
2024 நாடாளுமன்ற தேர்தலில் வாக்கு திருட்டு நடந்ததாகக் கூறி தேர்தல் ஆணையம் மீது எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி பகிரங்க குற்றச்சாட்டை முன்வைத்தார். இதற்காக நடத்தப்பட்ட செய்தியாளர் சந்திப்பில் PDF ஒன்றை வெளியிட்டுப் பூஜ்ஜியம் எண் கொண்ட முகவரியில் எப்படி வாக்காளர்கள் இருக்க முடியும் எனக் கேள்வி எழுப்பினர்.
ராகுல் காந்தியின் குற்றச்சாட்டை நிராகரித்த தேர்தல் ஆணையம், வீடற்ற மக்கள் தேர்தலில் வாக்களிக்க வேண்டும் என்ற நல்லெண்ணத்துடன் பின்பற்றப்படும் நடைமுறை இது என விளக்கம் அளித்தது. மேலும், ஆதாரங்களைச் சமர்ப்பித்து குற்றச்சாட்டை நிரூபிக்குமாறு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியது
இந்நிலையில், பீகாரில் வாக்கு திருட்டை முன்வைத்து வாக்காளர் உரிமை யாத்திரை என்ற பெயரில் ராகுல் காந்தி யாத்திரை நடத்தினார். மேலும் செய்தியாளர்கள் சந்திப்புகளிலும் தனது குற்றச்சாட்டைத் தொடர்ந்து நியாயப்படுத்தினார். இதனால், காங்கிரஸ் – பாஜக இடையே மோதல் போக்கு நிலவுகிறது.
இதனிடையே பாஜகவின் செய்தித்தொடர்பாளரான பிரதீப் பந்தாரி, ராகுல் காந்தியைக் கடுமையாக சாடியுள்ளார். தேர்தல் ஆணைம் மீது புகார் தெரிவித்து காங்கிரஸ் வெளியிட்ட PDF, மியான்மரில் தயாரிக்கப்பட்டது என அம்பலப்படுத்தி உள்ளார். காங்கிரஸ் கட்சியும், ராகுல் காந்தியும் அந்நிய சக்திகளால் இயக்கப்படுகிறார்கள் என்ற குற்றச்சாட்டு 100 சதவீதம் நிரூபணம் ஆகியுள்ளதாகவும் பிரதீப் பந்தாரி தெரிவித்துள்ளார்.
மற்றொரு பாஜகச் செய்தி தொடர்பாளரான ஷெசாத் பூனவாலா, வெளிநாடுகள் மீதும் வெளிநாட்டவர்கள் மீதுமே ராகுல் காந்திக்குப் பற்று இருப்பதாகச் சாடியுள்ளார். பஞ்சாப், ஹிமாச்சல் மாநிலங்கள் வெள்ளித்தில் தத்தளித்தபோது ராகுல் காந்தி மலேசியாவிற்குச் சுற்றுலா சென்றதே இதற்கு மிகப்பெரிய உதாரணம் எனவும் தெரிவித்திருக்கிறார்.
இந்தியாவின் மிகப்பெரும் பலமாகக் கருதப்படும் ஜனநாயகத்தைப் படுகொலை செய்ய வேண்டும் என்ற நோக்கில் ராகுல் காந்தியை இயக்கும் அந்நிய சக்தி யார்? எனக் கேள்வி எழுப்பியுள்ள ஷெசாத் பூனவாலா, வெளிநாட்டவர்களால் ஒரு பொம்மையைப் போல் இயக்கப்படுகிறீர்களா ராகுல் காந்தி? எனவும் காட்டமாக வினவியுள்ளார்.
இந்தியாவில் அந்நிய சக்திகளின் தலையீட்டை ராகுல் காந்தி விரும்புவது ஏன் எனக் கேள்வி எழுப்பியுள்ள ஷெசாத் பூனவாலா, பாஜக ஆதாரத்துடன் வெளியிட்டுள்ள குற்றச்சாட்டுக்குப் பதிலளிக்காமல் தப்ப முடியாது எனவும் தெரிவித்துள்ளார்.
இந்த விவகாரம் தொடர்பாக பாஜக செய்தித்தொடர்பாளர் ஆர்.பி.சிங் கூறுகையில், காங்கிரஸ் மற்றும் ராகுல் காந்தி SOROS உடன் தொடர்பில் இருப்பது அப்பட்டமாக வெளிப்பட்டுள்ளதாக விமர்சித்துள்ளார்.
ஒருபுறம் வாக்கு திருட்டு தொடர்பான ஆதாரத்தை சமர்ப்பிபேன் என ராகுல் மிரட்டல் விடுக்க, அதற்கு COUNTER கொடுக்கும் விதமாகப் பாஜக வெளியிட்டுள்ள ஆதாரம் அரசியல் களத்தை மேலும் சூடுபிடிக்கச் செய்துள்ளது.