பயங்கரவாத எதிர்ப்பு தொடர்பான இந்தியா-பிரான்ஸ் கூட்டு பணிக்குழுவின் 17வது கூட்டம் பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் நடைபெற்றது.
இந்தியக் குழுவிற்கு வெளியுறவு அமைச்சகத்தின் இணைச் செயலாளர் கே.டி.தேவாலும், பிரெஞ்சுக் குழுவிற்குப் பிரெஞ்சு பயங்கரவாத எதிர்ப்புத் தூதர் ஆலிவர் கரோனும் தலைமைத் தாங்கினர். இதில், பஹல்காம் பயங்கரவாத தாக்குதலை இரு தரப்பினரும் கண்டித்தனர்.
அரசு ஆதரவுடன் எல்லைத் தாண்டிய பயங்கரவாதம், அந்தந்தப் பகுதிகளில் பயங்கரவாதிகளின் நடவடிக்கைகள் மற்றும் மத்திய கிழக்கில் பயங்கரவாத அச்சுறுத்தல் உள்ளிட்ட அந்தந்த நாடுகளின் தற்போதைய அச்சுறுத்தல் மதிப்பீடு குறித்து இரு தரப்பினரும் கருத்துக்களைப் பரிமாறிக் கொண்டனர்.
இந்தியா-பிரான்ஸ் உரையாடலில் சைபர் தொடர்பான அச்சுறுத்தல்கள், அவற்றைக் கையாள்வது உள்ளிட்ட பல்வேறு தகவல்களை இருதரப்பும் விவாதித்தது.