சிலந்தி பூச்சிகளை கண்டு அச்சப்படும் மக்கள், இந்த வகை சிலந்திகளை கண்டால் உற்சாகம் அடைந்து விடுவார்கள்.
ஆஸ்திரேலியா நாட்டில் மயில் சிலந்திகள் அதிகளவில் காணப்படுகின்றன. மயில்போல் பல வண்ணங்களில் காணப்படும் இந்த ஆண் சிலந்திகள் அதன் வயிற்றுப்பகுதியைபெரியதாக்கி இரு கால்களால் டிரம்ஸ் அடிப்பதுபோல் செய்தபடி நடனமாடுகின்றன.
இனச்சேர்க்கையின்போது பெண் சிலந்தி பூச்சிகளை கவர்வதற்காக ஆண் சிலந்திகள் இவ்வாறு நடனமாடுகின்றன.
இந்த வகை சிலந்திகள் மிகவும் அரிதாகக் காணப்படுகின்றன. இதன் அளவு 2.5 முதல் 5 மில்லி மீட்டர் வரை இருக்கும்.
ஒவ்வொரு சிலந்தியின் மீதும் வித்தியாசமான வண்ணக் கோடுகள் அமைந்திருக்கும். சிலந்திகளின் நடனத்திற்கு ஏற்ப பின்னணி இசையுடன் உருவாக்கப்பட்ட வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.