நியாய விலைக் கடைகளுக்கெனத் தனித்துறை அமைக்கக்கோரி சென்னை எழும்பூரில் தமிழ்நாடு அரசு ரேஷன் கடை பணியாளர்கள் சங்கத்தினர் போராட்டம் நடத்தினர்.
நியாய விலைக் கடைகளுக்குத் தனித்துறை அமைக்கப்படும் எனத் திமுக தேர்தல் வாக்குறுதி அளித்திருந்தது.
அதனை நிறைவேற்றக்கோரி பலமுறைக் கோரிக்கை விடுத்தும் அரசு அதற்குச் செவிமடுக்காததால் 300க்கும் மேற்பட்ட ரேஷன் கடை ஊழியர்கள் எழும்பூரில் உள்ள ராஜரத்தினம் அரங்கம் முன்பு போராட்டத்தில் இறங்கினர்.
அப்போது பேசிய சங்கத்தின் பொதுச்செயலாளர் தினேஷ்குமார், ரேஷன் கடைகளுக்குத் தனித்துறை அமைப்போம் என வாக்குறுதி அளித்த திமுக, அதை செய்யாதது ஏன்? எனக் கேள்வி எழுப்பினார்.
மேலும், சொல்லாததைச் செய்யும் தமிழக முதல்வர், சொன்னதை செய்யாதது ஏன்? என்றும் கடுமையாக விமர்சித்தார். இதுமட்டுமின்றி, ஊக்கத்தொகை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளும் இந்தப் போராட்டத்தில் முன்வைக்கப்பட்டது.