மெக்சிகோவில் முக்கிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த எரிவாயு டேங்கர் லாரி வெடித்துச் சிதறியது.
மெக்சிகோ நகர நெடுஞ்சாலையில் ஒரு எரிவாயு டேங்கர் லாரி சென்று கொண்டிருந்தது. அப்போது திடீரென வெடித்து விபத்துக்குள்ளானது.
இதனால் தீப்பிழம்புகள் மற்றும் கரும்புகை கிளம்பியது. இதனையறிந்த தீயணைப்பு வீரர்கள் மற்றும் மருத்துவர்கள் உள்ளிட்ட அவசரக் குழுக்கள் சம்பவ இடத்திற்கு வந்தனர். பல மணி நேரம் போராடி தீ கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.
இந்த விபத்தால் 18 வாகனங்கள் எரிந்தன. 3 பேர் உயரிழந்தனர். 70க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். அவர்களில் 19 பேர் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதன் காரணமாக நெடுஞ்சாலை பல மணி நேரம் மூடப்பட்டது. பின்னர், வழக்கம் போல் சாலை திறக்கப்பட்டு வாகனங்கள் இயங்க தொடங்கின.