அமெரிக்காவில் இந்தியர் தலை துண்டிக்கப்பட்டுக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடகாவைச் சேர்ந்த சந்திர நாகமல்லையா என்பவர் டெக்சாஸ் மாகாணத்தின் டல்லாஸ் பகுதியில் உள்ள மோட்டலில் மேலாளராக வேலை செய்து வந்தார்.
இந்நிலையில் அவருக்கும் சக ஊழியரான கோபோஸ் மார்டினெஸ் என்பவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. அப்போது ஆத்திரமடைந்த கோபோஸ், கத்தியுடன் நாகமல்லையாவைத் துரத்தி துரத்தி தாக்கத் தொடங்கினார்.
அலறல் சத்தம் கேட்டுச் சந்திர நாகமல்லையாவின் மனைவி, மகன் ஆகிய இருவரும் அவரை தடுக்க முயன்றனர். அப்போது இருவரையும் தாக்கிவிட்டு அவர்களின் கண்முன்பே நாகமல்லையாவின் தலையை கோபோஸ் துண்டித்துக் கொலைச் செய்தார்.
இந்தச் சம்பவம் தொடர்பாக, கோபோஸ் மார்டினெஸைப் போலீசார் கைது செய்தனர். விசாரணையில், பழைய வாஷிங்மெசினை பயன்படுத்துவது தொடர்பாகத் தன்னுடன் பேசுவதற்கு நாகமல்லையா மொழிபெயர்ப்பாளரை அணுகியதாகவும், அதனால் கோபம் ஏற்பட்டுக் கொலை செய்ததாகவும் கூறியுள்ளார். அத்துடன் அவர் மீது பல்வேறு குற்ற வழக்குகள் இருப்பதும் தெரியவந்துள்ளது.