மதுரை மாடக்குளம் பகுதியில் 17 கோடி ரூபாய் மதிப்பில் பலப்படுத்தப்பட்ட கண்மாயின் கரை, ஒரு மழைக்குக் கூட தாங்காமல் இடிந்து விட்டதாகப் பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
மதுரை மாநகரில் உள்ள மாடக்குளம் கண்மாய், பழங்காநத்தம், விளாச்சேரி உள்ளிட்ட பகுதிகளுக்கு நீராதாரமாக விளங்கி வருகிறது.
கடந்த 4 மாதங்களாக 17 கோடியே 56 லட்சம் ரூபாய் செலவில் கண்மாயின் இருப்புறங்களிலும் கான்கிரீட் தடுப்பு சுவர்கள் அமைக்கும் பணி நடைபெற்று வரும் நிலையில், மதுரையில் பெய்த கனமழை காரணாக கண்மாயின் தடுப்பு சுவர்கள் இடிந்து சேதமடைந்தன.
பணிகள் முடிவடைந்து பயன்பாட்டிற்கு வரும் முன்பே கண்மாயின் தடுப்பு சுவர்கள் சேதமடைந்ததால் சம்பந்தப்பட்ட ஒப்பந்ததாரர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனப் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.