கரீபியன் தீவின் பஹாமாஸ் பகுதியில் கார்னிவல் கொண்டாட்டம் களைகட்டியது.
வண்ணமயமான உடை, இசை, நடனம் மற்றும் கொண்டாட்டங்கள் நிறைந்த ஒரு பெரிய கலாச்சார நிகழ்வாகக் கார்னிவல் உள்ளது.
இத்திருவிழா கரீபியன் தீவுகளில் ஆண்டு முழுவதும் நடைபெறும். இது மக்களால் மிகவும் எதிர்பார்க்கப்படும் திருவிழாக்களில் முக்கியமான ஒன்றாகும். இது கரீபியன் கலாச்சாரம் மற்றும் ஆப்பிரிக்கப் பாரம்பரியத்தின் ஒரு முக்கிய அம்சமாகும்.
ஒவ்வொரு தீவும் தனித்துவமான கார்னிவல் கொண்டாட்டங்களைக் கொண்டுள்ளன.இதில் டிரினிடாட், ஆன்டிகுவா, பார்படாஸ், செயின்ட் லூசியா, மார்டினிக் போன்ற தீவுகள் அடங்கும்.
அந்தவகையில், பஹாமாஸ் பகுதியில் கார்னிவல் கொண்டாட்டத்தின் போது விதவிதமான உடைகள் அணிந்து ஆட்டம், பாட்டத்துடன் ஏராளமானோர் பங்கேற்று மகிழ்ந்தனர்.