இணையத்தை கலக்கும் NANO BANANA ட்ரெண்ட்!
Aug 23, 2026, 03:40 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் உலகம்

இணையத்தை கலக்கும் NANO BANANA ட்ரெண்ட்!

Murugesan M by Murugesan M
Sep 13, 2025, 03:45 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

இணையத்தில் அவ்வப்போது சில ட்ரெண்டுகள் ஆதிக்கம் செலுத்துவது வழக்கம். அந்த வகையில் தற்போது NANO BANANA ட்ரெண்ட் இணையத்தை கலக்கி வருகிறது. இது குறித்த செய்தி தொகுப்பைப் பார்க்கலாம்.

கடந்த மாதம் 26ம் தேதி, கூகுள் நிறுவனத்தின் சிஇஓ-வான சுந்தர் பிச்சை தனது எக்ஸ் பக்கத்தில் பதிவொன்றை இட்டிருந்தார். அதில், 3 வாழைப்பழங்களின் emoji-கள் மட்டுமே இடம்பெற்றிருந்தன. இதற்கு என்ன அர்த்தம், கூகுள் புதியதாக ஏதேனும் தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்தப்போகிறதா என அப்போது இணையத்தில் காரசாரமாக விவாதம் நடைபெற்று வந்தது.

cut பண்ணி open செய்தால், அந்த NANO BANANA இன்று இணையத்தையே அல்லோகலப்படுத்தி வருகிறது. ட்விட்டர், இன்ஸ்டா, ஃபேஸ்புக் என எந்தப் பக்கம் திரும்பினாலும் NANO BANANA-ன் ஆதிக்கம்தான்.

சில மாதங்களுக்கு முன்பு CHATGPT அறிமுகம் செய்த Studio Ghibli என்ற ட்ரெண்ட் ஒட்டுமொத்த இணையத்தையே முழுமையாக ஆட்கொண்டிருந்தது. அதன் தாக்கம் சற்று தணிந்த நிலையில், தற்போது கூகுளின் NANO BANANA ட்ரெண்ட் சோஷியல் மீடியாவில் பெரும் செல்வாக்கு செலுத்த தொடங்குகியுள்ளது.

ஒருவரின் புகைப்படத்தை 3D மாதிரியாக மாற்றுவதுதான் NANO BANANA ட்ரெண்ட். கூகுள் நிறுவனத்தின் ஜெமினி 2.5 ஃப்ளாஷ் இமேஜ் டூல்-தான் புகைப்படங்களை 3D மாதிரியாக மாற்றி வழங்கி வருகிறது.

இந்த 3D மாதிரிகள் நாம் பதிவேற்றும் புகைப்படங்களில் உள்ள முகபாவங்கள், உடைகளின் மடிப்பு உள்ளிட்டவற்றை அப்படியே துல்லியமாக வெளிப்படுத்துகின்றன. இதனால், 3D மாதிரி பார்ப்பதற்கு உண்மையான சிலைப் போலவே காட்சியளிப்பது NANO BANANA-ன் வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்துள்ளது.இது இலவச டூல் என்பதால் இணையவாசிகள் அனைவரும், தங்களது படங்களையும், தங்களுக்கு வேண்டியர்களின் படங்களையும் 3D மாதிரியாக மாற்றிப் பகிர்ந்து வருகின்றனர்.

ஏதோ இளைஞர்கள் மட்டும்தான் இந்த ட்ரெண்டில் இணைந்துள்ளார்கள் என நினைக்க வேண்டாம். திரைப் பிரபலங்கள், அரசியல்வாதிகள், தொழிலதிபர்கள் என அனைவரையும், இந்த NANO BANANA-ன் ஆக்டோபஸ் கரங்கள் கட்டி இழுத்துள்ளன.

அண்மையில், அசாம் மாநிலத்தின் முதலமைச்சரான ஹிமந்தா பிஸ்வா சர்மாகூட இந்த ட்ரெண்டில் இணைந்து, தனது 3D மாதிரி படத்தை ட்விட்டரில் பகிர்ந்திருந்தார். சிலர் தங்களது புகைப்படங்களை மட்டுமல்லாமல் தங்களது செல்லப் பிராணிகள், பிடித்த அனிமேஷன் கேரக்டர்கள், பிடித்த நடிகர்களின் படங்களையும் 3D-ஆக மாற்றி வருகின்றனர்

Google AI Studio இணையதளத்திற்குச் சென்று, முகப்புப் பக்கத்தில் உள்ள ‘Try Nano Banana’ என்பதைக் கிளிக் செய்வதன் மூலம் அனைவராலும் தங்களது படத்தின் மினியேச்சர் வடிவத்தை உருவாக்க முடியும். Nano Banana மூலம் உருவாக்கப்படும் 3டி மாதிரிகளை ஆர்டர்  செய்து நிஜமான சிலைகளாக வாங்க முடிந்தால் எப்படி இருக்கும் எனப் பலரும் இணையத்தில் கருத்து பதிவிட்டு வருகின்றனர்.

Tags: NANO BANANA Trend That's Taking the Internet by stormNANO BANANA ட்ரெண்ட்
Share
Tweet
SendShare
Previous Post

திருப்பத்தூர் : ஊராட்சி மன்ற தலைவரை கொலை செய்ய முயற்சி!

Next Post

97 லட்சம் வாகனங்களை அகற்றுவதன் மூலம் ரூ.40,000 கோடி ஜிஎஸ்டி வருவாய் கிடைக்கும் – மத்திய அமைச்சர் நிதின் கட்கரி

Related News

மதுரை மீனாட்சி அம்மன் கோவில் கும்பாபிஷேக பணிகள் மந்தமாக நடைபெறுகிறது – பக்தர்கள் குற்றச்சாட்டு!

வெளிநாட்டினருக்கு விசா வழங்க விதித்திருந்த தடையை நீக்கியது அமெரிக்க நீதிமன்றம்!

அசிம் முனீரிடம் குவியும் அதிகாரம் : முடியரசு ஆகும் பாகிஸ்தான் – இந்தியாவிற்கு சொல்லும் செய்தி என்ன? – சிறப்பு தொகுப்பு!

“பார்த்த ஞாபகம் இல்லையோ” : நடிகை சௌகார் ஜானகி கடந்து வந்த பாதை- சிறப்பு தொகுப்பு!

நாட்டை சீர்குலைக்க நடந்த சதி முறியடிப்பு : பாகிஸ்தான் கைக்கூலியான Shehzad Bhatti நெட்வொர்க் அழிக்கப்பட்டது எப்படி? – சிறப்பு தொகுப்பு!

இந்தியாவின் கடல்சார் வர்த்தகத்தில் புதிய அத்தியாயம் : இனி வெளிநாட்டு துறைமுகங்களுக்கு “NO” : விழிஞ்சத்தில் முழுமையான ஏற்றுமதி- இறக்குமதி தொடக்கம் – சிறப்பு தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

விகடன் நிர்வாகம் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் – நயினார் நாகேந்திரன் வலியுறுத்தல்!

அருட்பெருஞ்ஜோதி… தனிப்பெருங்கருணை – வடலூர் சத்திய ஞான சபையில் புதிய கொடிமரம்!

திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவிந்த பக்தர்கள் – 4 மணி நேரம் காத்திருந்து பக்தர்கள் தரிசனம்!

திருச்செந்தூர் அருகே விநாயகர் கோயில் இடிப்பு – இந்து முன்னணி ஆர்பாட்டம்!

அனைத்து முதுநிலை கோயில்களிலும் செல்போன் பாதுகாப்பு கவுண்டர்கள் – அமைச்சர் ரமேஷ் தகவல்!

ராக்கெட் பாகங்களை எடுத்துச் செல்ல பழைய மிதிவண்டிகள் – இஸ்ரோ தலைவர் நாராயணன்

ஒடிசாவின் பாரதீப் துறைமுகம் அருகே பனாமா சரக்கு கப்பல் விபத்து – மீட்பு பணி தீவிரம்!

நிலத்திற்கு பட்டா வழங்க லஞ்சம் கேட்ட முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் – வழக்கறிஞர் ரமேஷ் பிரபு குற்றச்சாட்டு!

கம்யூனிஸ்ட் கட்சியினரின் தகவல்கள் சேகரிக்கப்பட்டது மாவட்ட ஆட்சியருக்கே தெரியாது – அமைச்சர் நிர்மல் குமார் விளக்கம்!

புதிதாக நியமிக்கப்பட்ட பாஜக தேசியப் பொறுப்பாளர்கள் – பிரதமர் மோடியுடன் சந்திப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies