இன்று மணிப்பூர் செல்லும் பிரதமர் நரேந்திர மோடி பல்வேறு நலத்திட்டங்களை தொடங்கி வைக்கிறார்.
மணிப்பூரில் கடந்த 2023-ம் ஆண்டு மே மாதம், மெய்தி மற்றும் குக்கி அகிய 2 இனக்குழுவினருக்கு இடையே மோதல் வெடித்தது. இந்த வன்முறையில் 260க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர், இதனை தொடர்ந்து, ராணுவம் உள்ளிட்ட பாதுகாப்பு படையினர் பெருமளவில் குவிக்கப்பட்டு நிலைமை கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.
இந்த நிலையில், பல்வேறு அரசுத்திட்டங்களை தொடங்கி வைப்பதற்காக பிரதமர் மோடி இன்று மணிப்பூர் மாநிலம் இம்பாலிற்கு செல்ல உள்ளார். அப்போது மெய்தேய் மற்றும் குக்கி இன மக்கள் வசிக்கும் பகுதிகளில் 8 ஆயிரத்து 500 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்களை பிரதமர் தொடங்கி வைக்கிறார்.
பிரதமரின் வருகையை ஒட்டி மணிப்பூர் மாநிலம் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்புகள் போடப்பட்டுள்ளன.