2047 ஆம் ஆண்டு இந்தியாவின் கனவை நினைவாக்க வேண்டும் என மத்திய சட்டத்துறை அமைச்சர் அர்ஜுன் ராம் மேக் வால் தெரிவித்துள்ளார்.
சென்னை, பல்லாவரத்தில் உள்ள வேல்ஸ் பல்கலைக்கழகத்தின் 16-வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. இதில் மத்திய சட்டத்துறை அமைச்சர் அர்ஜுன் ராம் மேக் வால் மற்றும் பல்கலைக்கழக founder ஐசரி கணேசன் ஆகியோர் கலந்து கொண்டனர். அப்போது கிரிக்கெட் வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின், திரைப்பட இயக்குனர் வெற்றிமாறன், தொழிலதிபர் ஏ.கே.கோபாலன் ஆகியோருக்கு கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது. இளநிலை, முதுகலை, முனைவர் உள்ளிட்ட பாடப்பிரிவுகளின் பயின்ற சுமார் ஐந்தாயிரம் மாணவ மாணவிகளுக்கு பட்டங்கள் வழங்கப்பட்டது .
இதனைதொடர்ந்து பேசிய அர்ஜுன் ராம் மேக் வால், உலகளவில் சென்னை பாரம்பரியமிக்க நவீன நகரத்தில் ஒன்றாக திகழ்கிறது என்றும், ஆகையால் தான் இங்கு கல்வி நிறுவனங்கள் உயர்தர சேவையினை வழங்கி வருவதாகவும் பாராட்டினார்.
2047 ஆம் ஆண்டில் இந்தியாவின் கனவை நனவாக்க வேண்டுமென்றால், நாம் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தின் உச்சியில் இருக்க வேண்டும் என்றும், தொழில் புரட்சியில் தற்போது நாம் 4.0 இல் இருக்கிறோம் எனவும் கூறியுள்ளார்.