தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் ஆட்டோ ஓட்டுனரை – முறையாக சிகிச்சை அளிக்காமல் ஒரே நாளில் மருத்துவர்கள் வெளியேற்றியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
அம்மச்சியாபுரம் கிராமத்தை சேர்ந்தவர் நதியழகன். இவர் ஆட்டோவில் சென்று கொண்டிருந்த போது, அதே வழியில் வந்த லாரியை முந்த முயன்ற தனியார் பேருந்து ஆடோ மீது மோதியது.
இதில் பலத்த காயமடைந்த ஆட்டோ ஓட்டுனர் தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால், முறையாக சிகிச்சை அளிக்காமல் ஒரே நாளில் மருத்துவர்கள் அனுப்பிவிட்டதாக குற்றம் சாட்டியுள்ளனர்.