தீபாவளி பண்டிகையை ஒட்டி சத்தீஸ்கரில் பசுமை பட்டாசுகள் தயாரிக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
உள்ளூர் தயாரிப்புகளை ஊக்குவிக்கவும், பெண்களுக்கு அதிகாரம் அளிக்கும் திட்டத்தின் மூலம் சத்தீஸ்கரின் தம்தாரி மாவட்டத்தில் பசுமை பட்டாசுகள் தயாரிக்கும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது. பட்டாசுகள் தயாரிப்பு பணியில் 200க்கும் மேற்பட்ட பெண்கள் ஈடுபட்டுள்ளனர்.